சினிமா டிக்கெட் கட்டணம் : புதிய அரசாணை வெளியீடு

தினமலர்  தினமலர்
சினிமா டிக்கெட் கட்டணம் : புதிய அரசாணை வெளியீடு

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி போன்றவற்றால் சினிமா கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சமீபத்தில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது தமிழக அரசு. அதன்படி புதிய சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை தமிழக அரசு சார்பில் முறையாக இன்று வெளியிடப்பட்டது. அதன்விபரம் வருமாறு...

மாநகராட்சி
ஏசி தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.15, அதிகபட்சம் ரூ.62.50
ஏசி அல்லாத தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.37.50

நகராட்சி
ஏசி தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.50.00
ஏசி அல்லாத தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.37.50

பேரூராட்சி
ஏசி தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.31.25
ஏசி அல்லாத தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.25.00

கிராம பஞ்சாயத்து
ஏசி தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.18.75
ஏசி அல்லாத தியேட்டர்கள் : குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.15

மற்ற ஊர்கள்
மல்டிபிளக்ஸ் : சென்னை அல்லாத மற்ற ஊர்களில் குறைந்தப்டசம் ரூ.15, அதிகபட்சம் ரூ.150
மல்டிபிளக்ஸ் : சென்னை, குறைந்தபட்சம் ரூ.50, அதிகபட்சம் : ரூ.150

சென்னை
மல்டிபிளக்ஸ் அல்லாத பிற ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்சம் ரூ.40, அதிகபட்சம் ரூ.100
ஏசி அல்லாத பிற தியேட்டர்களில் குறைந்தபட்சம் ரூ.30, அதிகபட்சம் ரூ.80

இந்த கட்டணம் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி நீங்கலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டி 28 சதவீதமும், கேளிக்கை வரி 8 சதவீதமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

மூலக்கதை