சென்சார் தாமதம்... போட்டியிலிருந்து விலகிய படங்கள்...

தினமலர்  தினமலர்
சென்சார் தாமதம்... போட்டியிலிருந்து விலகிய படங்கள்...

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் மேயாத மான். 'மது' என்ற குறும்படத்தை திரைக்கதையாக்கி அறிமுக இயக்குனர் ரத்னகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். சின்னத்திரை நடிகையான பிரியா பவானி சங்கர் கதநாயகியாக நடித்திருக்கிறார்.

'மேயாத மான்' படத்தின் கதை என்ன? சென்னை ராயபுரம் பின்னணியில் நடக்கும் காமெடி கலந்த காதல் கதையான இப்படத்தில் கன்னி கழியாத பையனாக வைபவ் நடித்திருக்கிறாராம். சந்தோஷ் நாராயணன், பிரதீப் இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்துள்ளனர். இந்த படம் தீபாவளி வெளியீடாக வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மேயாத மான் படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட் வழங்கப்படவில்லை. இருந்தாலும் வாங்கிவிடுவோம் என்கிறார்கள் படக்கு.

இதேபோல், சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள 'கொடிவீரன்' படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிப்பு செய்தனர். 'கொடிவீரன்' படமும் இன்னும் சென்சார் ஆகவில்லை. எனவே தீபாவளி ரிலீஸ் போட்டியிலிருந்து விலகியது கொடி வீரன்.

மூலக்கதை