வேலைக்காரன் படத்தை சென்னையில் வெளியிடும் எஸ்.பி.ஐ. சினிமாஸ்

தினமலர்  தினமலர்
வேலைக்காரன் படத்தை சென்னையில் வெளியிடும் எஸ்.பி.ஐ. சினிமாஸ்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, அவரது நண்பர் ராஜா தயாரிக்கும் படம் - வேலைக்காரன். 'ரெமோ' படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் களமிறங்கிய ராஜாவின் இரண்டாவது தயாரிப்பு இது. 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம்.

நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'வேலைக்காரன்' கிருஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. 'வேலைக்காரன்' படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தற்போதைய சூழலில் அவுட்ரைட் அல்லது எம்.ஜி.முறையில் படங்களை வாங்குவது ரிஸ்க் என்பதால், வேலைக்காரன் படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் வாங்கி வெளியிடுகிறதாம்.

மூலக்கதை