உதயநிதியின் 7 கிணறு

தினமலர்  தினமலர்
உதயநிதியின் 7 கிணறு

ஏ சென்டரில் நமக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது, எனவே பி அண்ட் சி ஆடியன்ஸிடம் ரீச்சாக வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதனால்தான், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் என பி அண்ட் சி ஆடியன்ஸுக்குப் பிடித்தமான படங்களில் நடித்து வருகிறார்.

உதயநிதியின் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வெளிவரவிருப்பது 'இப்படை வெல்லும்'. இந்தப்படம் வழக்கமான உதயநிதி படமாக இல்லாமல் ஏ சென்டர் ஆடியன்ஸையும் திருப்திபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படை வெல்லும் என்ன ரிசல்ட்டை தரப்போகிறதோ என சின்ன டென்ஷனில் இருக்கிறார் உதயநிதி. கௌரவ் நாராயணன் இயக்கியுள்ள 'இப்படை வெல்லும்' நவம்பரில் ரிலீஸாக உள்ளது.

இந்தப்படத்தை அடுத்து, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. '7 கிணறு' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குநரானவர் இவர். '7 கிணறு' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'விக்ரம் வேதா' புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

மூலக்கதை