'இந்தியன் 2', கமலுக்குப் பதில் சூர்யா, வதந்தியா ? உண்மையா ?

தினமலர்  தினமலர்
இந்தியன் 2, கமலுக்குப் பதில் சூர்யா, வதந்தியா ? உண்மையா ?

எந்த ஒரு விஷயமும் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள். அதிலும் திரையுலகம் சார்ந்த பல விஷயங்கள் இப்படித்தான் புகைய ஆரம்பித்து பின்னர் தீவிரமாகப் பற்றிக் கொள்ளும். அப்படித்தான் நேற்று திடீரென 'இந்தியன் 2' படத்திலிருந்து கமல்ஹாசன் விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

உடனே, சூர்யா ரசிகர்கள் 'இந்தியன் 2' படத்தில் சூர்யா நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கம் என்றும், வயதான தோற்றத்திலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியும் என்றும் கருத்துக்களைப் பகிர ஆரம்பித்தனர். இந்த தகவல் வதந்தியா அல்லது உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

'இந்தியன் 2' படத்திற்காக கமல்ஹாசனுக்குப் பேசப்பட்ட சம்பளத் தொகையில் அவருக்குத் திருப்தியில்லை என்றும் அதனால் கமல்ஹாசன் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவியுள்ளன. 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனைத் தவிர வேறு யார் நடித்தாலும் அந்தப் படத்திற்குண்டான மரியாதை கிடைக்காது என்பதே உண்மை என கமல்ஹாசன் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மூலக்கதை