முதல் முறையாக களமிறங்கும் பெண் நடுவர்!

PARIS TAMIL  PARIS TAMIL
முதல் முறையாக களமிறங்கும் பெண் நடுவர்!

 

முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு பெண் ஒருவர் அம்பயராக களமறங்கிறார்.
 
இங்கிலாந்தை சேர்ந்த கிளைர்(28) என்பவர் அங்கு நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ண தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.
 
தற்போது, அவுஸ்திரேலியாவில் லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் அம்பயராக கிளைர் களமிறங்கவுள்ளார்.
 
இவருடன் இணைந்து பிரபல அம்பையர் பால் வில்சனும் செயல்படுவார். இதுகுறித்து கிளைர் போலோசோக் கூறியதாவது, அதிகமாக கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளது. 
 
இதனால் அம்பையர் தேர்வில் படித்து வெற்றி பெற்றேன், ஆனால் எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என கூறியுள்ளார்.

 

மூலக்கதை