பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்

ஜமைக்கா: இர்மா, மரியா உள்ளிட்ட புயல்கள், கரீபியன் தீவுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டொமினிகா, பார்புடா, செயின்ட் மார்டின் உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த புயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கரீபியன் லெவன்-டிரினிடாட் அணிகளுக்கு இடையே, போர்ட் ஆப் ஸ்பெயினில் வரும் 14ம் தேதி, காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

நட்சத்திர ஆல் ரவுண்டர் பொல்லார்டு டிரினிடாட் அணிக்கு தலைமை ஏற்கிறார்.

கரீபியன் லெவன் அணியை டேரன் சம்மி வழி நடத்துகிறார். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம், புயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடப்படும்.

அது தவிர துணி உள்ளிட்ட பொருட்களை திரட்டுவதற்காக, போட்டியின் போது மைதானத்தை சுற்றிலும் பெட்டிகள் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை