புதுவிதிகளுடன் இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

PARIS TAMIL  PARIS TAMIL
புதுவிதிகளுடன் இலங்கை  பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

 
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று ஆரம்பமாகின்றது. 
 
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண் டாவது போட்டி பகலிரவு டெஸ்டாக நடைபெறவுள்ளது.  தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் நிமிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புதிய பழைய இளைய வீரர்கள் என ஒரு கலவையாக டுபாய் சென்றுள்ளது இலங்கை அணி.
 
மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுபெற்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
 
கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய அம்சமாக யூனிஸ் கானும், மிஸ்பா உல் ஹக்கும் இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் யூனிஸ்கான். 
 
கடந்த காலங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இவர்கள் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை பல போட்டிகளில் கரை சேர்த்துள்ளனர். 
 
முன்னணி வீரர்களின் ஓய்வால் துடுப்பாட்ட வரிசை பலவீனமாக உள்ள நிலையில் யாசிர் ஷாவின் சுழற்பந்து வீச்சை நம்பி பாகிஸ் தான் அணி இப்போட்டியை எதிர் கொள்கிறது. 
 
2 ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் யாசிர் ஷா, 24 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பதால் பாகிஸ்தான் அணி அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வென்று, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளது. - 
 
இன்றைய போட்டியில் உள்ள இலங்கையும் சரி பாகிஸ்தானும் சரி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் உலகுக்கு தங்களை நிரூபிக்கவும் இந்த டெஸ்ட் தொடரை பயன்படுத்தப்போவது நிச்சயம்.
 
இன்று காலை. 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலக்கதை