முத்தக்காட்சிக்கு பியாவை வற்புறுத்தவில்லை: இயக்குனர் விஜயலட்சுமி

தினமலர்  தினமலர்
முத்தக்காட்சிக்கு பியாவை வற்புறுத்தவில்லை: இயக்குனர் விஜயலட்சுமி

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி, 20 வருடங்களுக்கு முன்பு பாட்டுப்பாடவா என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு தற்போது அபியும் அனுவும் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஹீரோ டொவினோ தாமஸ், ஹீரோயின் பியா ஆகியோரின் லிப் லாக் முத்தக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பெண் இயக்குனர் படத்தில் இது இடம்பெறலாமா என்றும், பியாவை வற்புறுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் பி.ஆர். விஜயலட்சுமி அளித்துள்ள விளக்கம் வருமாறு:

ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் முக்கியமான கட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம்.

இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து, எந்தவித தயக்கமும் இன்றி நடித்து கொடுத்தார்கள். லிப் லாக் முத்தக் காட்சிகள் படத்தில் இருப்பது இருவருக்கும் முன்பே தெரியும். பியா அதற்கு ஒப்புக்கொண்டுதான் நடித்தார். கதையின் தன்மை அவருக்கு தெரியும் என்பதால் அவரை வற்புறுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்த வித்யாசமான, துணிச்சலான காதல் கதையை இளைஞர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்கிறார் இயக்குனர் விஜயலக்ஷ்மி.

மூலக்கதை