இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி; உலக வங்கி பாராட்டு

தினமலர்  தினமலர்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி; உலக வங்கி பாராட்டு

நியூயார்க் : நியூ­யார்க்­கில், புளும்­பெர்க் சர்­வ­தேச வர்த்­தக மாநாட்­டில், உலக வங்கி தலை­வர், ஜிம் கிம் பேசி­ய­தா­வது: இந்­தாண்டு, சர்­வ­தேச பொரு­ளா­தார வளர்ச்சி சிறப்­பாக இருக்­கும். இந்­திய பொரு­ளா­தா­ரம், வலி­மை­யு­டன் சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. வள­ரும் நாடு­க­ளுக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு, அதிக நிதி தேவைப்­ப­டு­கிறது. கல்வி, ஆரோக்­கி­யம், பரு­வ­நிலை மாறு­பாடு சார்ந்த முன்­னேற்­பா­டு­கள் போன்­ற­வற்­றுக்கு, அதிக முத­லீடு தேவை. இந்த வாய்ப்பை, அரசு மற்­றும் தனி­யார் துறை­யி­னர் இணைந்து பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

இந்­தியா உடன், ஜப்­பான், ஐரோப்பா, அமெ­ரிக்கா ஆகி­ய­வை­யும் வளர்ச்சி கண்டு வரு­கின்றன. விளை பொருள் ஏற்­று­ம­தி­யா­ளர்­களை விட, இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் சிறப்­பாக செயல்­ப­டு­கின்­ற­னர். அத­னால், வளர்ச்சி சீராக உள்­ளது. ஒவ்­வொரு நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மற்­றும் கடன் குறித்து, உன்­னிப்­பாக, உலக வங்கி கவ­னித்து வரு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை