‘ஸ்மார்ட் போன்’ வணிகத்தில் பங்கு; கூகுள் – எச்.டி.சி., ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
‘ஸ்மார்ட் போன்’ வணிகத்தில் பங்கு; கூகுள் – எச்.டி.சி., ஒப்பந்தம்

புதுடில்லி : தைவான் நாட்­டைச் சேர்ந்த, எச்.டி.சி., நிறு­வ­னத்­தின், ‘ஸ்மார்ட் போன்’ வணி­கத்­தின் ஒரு பகு­தியை, வாங்­கு­வ­தற்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்டு உள்­ள­தாக, ‘கூகுள்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இதற்­காக, எச்.டி.சி., நிறு­வ­னத்­துக்கு, கூகுள், 7,050 கோடி ரூபாயை, ரொக்­க­மாக வழங்க இருக்­கிறது.மேலும், ‘கூகுள் பிக்­ஸல் ஸ்மார்ட் போன்’ தயா­ரிப்­பில் பணி­யாற்றி வரும், எச்.டி.சி., பணி­யா­ளர்­கள், அறி­வு­சார் சொத்­து­ரிமை உள்­ளிட்­ட­வற்றை பகிர்­வது குறித்­தும் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.

இந்த ஒப்­பந்­தத்­தின் மூலம், எச்.டி.சி., நிறு­வ­னத்­துக்கு, நிதி வசதி, செயல்­பாட்டு திறன் போன்­றவை அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கூகுளை பொறுத்­த­வரை, திறன்­மிகு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்­கும். ‘கூகுள் பிக்­ஸல்’ தயா­ரிப்­புக்கு, எச்.டி.சி.,யின் அறி­வு­சார் சொத்­து­ரி­மையை எளி­தாக அணுக இய­லும். நடை­மு­றை­களை முடித்து, 2018 துவக்­கத்­தில், ஒப்­பந்­தம் செயல்­பாட்­டுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

‘‘இந்த ஒப்­பந்­த­மா­னது, கூகுள் நிறு­வ­னத்­தின் வன்­பொ­ருள் வணி­கத்­துக்கு உர­மூட்­டு­வ­தா­க­வும், எச்.டி.சி., ஸ்மார்ட் போன் மற்­றும் மெய்­நி­கர் சாத­னங்­கள் தயா­ரிப்­பில், புது­மை­கள் தொட­ர­வும் உத­வும்,’’ என, எச்.டி.சி., நிறு­வ­னத்­தின், தலைமை செயல் அதி­கா­ரி­யும், தலை­வ­ரு­மான, செர் வாங் தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை