பங்கு வெளியீட்டுக்கு வருகிறது லெமன் டிரீ ஓட்டல்ஸ் நிறுவனம்

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது லெமன் டிரீ ஓட்டல்ஸ் நிறுவனம்

புதுடில்லி : விருந்­தோம்­பல் துறை­யில் ஈடு­பட்­டுள்ள, லெமன் டிரீ ஓட்­டல்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து உள்­ளது. இந்­நி­று­வ­னம், 19 கோடியே, 57 லட்­சத்து, 97 ஆயி­ரம் பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளது.

பிராண்டை பிர­ப­லப்­ப­டுத்­த­வும், பங்­கு­தா­ரர்­களின் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­கும், பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­ப­டு­வ­தால் கிடைக்­கும் பலன்­களை பெறு­வ­தற்­கா­க­வும், இம்­மு­யற்­சி­யில் இறங்கி உள்­ள­தாக, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, கோட்­டக் மகிந்­திரா கேப்­பிட்­டல் கம்­பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்­தியா, ஜே.பி.மார்­கன் இந்­தியா, யெஸ் செக்­யூ­ரிட்­டிஸ் ஆகிய நிறு­வ­னங்­கள் மேற்­கொள்ள இருக்­கின்றன. லெமன் டிரீ ஓட்­டல்ஸ் நிறு­வ­னத்­துக்கு, 24 நக­ரங்­களில், 4,300 அறை­க­ளு­டன், 40 ஓட்­டல்­கள் உள்ளன.

மூலக்கதை