ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி!

 குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் மற்றும் ஹென்ரிக்சின் சிறப்பான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐபிஎல் தொடரின் இன்றைய 53-வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
 
நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி குஜராத் லயன்ஸ் அணியின் வெயின் ஸ்மித், இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்கள் வந்துக் கொண்டிருந்தது.
 
பவர் பிளே-ஆன முதல் 6 ஓவரில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்கள் குவித்தது.
 
இஷான் கிஷன் 27 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் அரை சதமும், ஸ்மித் 31 பந்தில் அரைசதம் அடிக்க குஜராத் அணி 9.3 ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டது.
 
அந்த அணியின் எண்ணிக்கை 10.5 ஓவரில் 111 ஓட்டங்களாக இருக்கும்போது ஸ்மித் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
 
ஹைதராபாத் அணி சார்பில் 13-வது ஓவரை மொகமது சிரஜ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
இதே ஓவரின் கடைசி பந்தில் ரெய்னா பெளலியன் திரும்பினார். அத்துடன் அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். 120 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியின் எண்ணிக்கை அப்படியே சரிய ஆரம்பித்தது.
 
இந்த விக்கெட்டுக்கள் இழப்பால் நிலைகுலைந்த குஜராத் அணியை ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை.
 
தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 19.2 ஓவரில் 154 ஓட்டங்களில் குஜராத் அணியை ஆல்அவுட் செய்தனர். ஜடேஜா 8 ஓட்டங்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
 
நான்கு பேர் டக் அவுட்டில் வெளியேறினார்கள். ஹைதராபாத் அணி சார்பில் மொகமது சிரஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு, துவக்க வீரர் தவான் (18) ஏமாற்றினார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் (4) சொதப்பலாக வெளியேற, பின் வந்த சங்கர், தலைவர் வார்னருக்கு தோள் கொடுத்தார்.
 
இருவரும் குஜராத் பந்துவீச்சை பதம் பார்க்க, ஹைதராபாத் அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறினர். பவுண்டரிகளாக வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் கடந்தனர்.
 
இதையடுத்து 18.1 ஓவரில், ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
 
இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தமிட்டு களமிறங்கிய குஜராத் அணி, இந்த ஆண்டு உடன் விடை பெற்றது. கடந்த ஆண்டில் ஆறுதலாக வென்ற குஜராத் அணி, இந்த ஆண்டு தோல்வி முகத்தையே சந்தித்தது.

மூலக்கதை