இந்தியாவுக்கு எதிராக பாக். சிறப்பாக விளையாடும் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிராக பாக். சிறப்பாக விளையாடும் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் நம்பிக்கை

கராச்சி: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஐசிசி-யுடன் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தொடரில் இந்தியா பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வந்தது.

ஆனால் புது டெல்லியில் நேற்று நடந்த பிசிசிஐ-யின் (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) சிறப்பு பொது குழு கூட்டத்தில், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

 இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி ஜுன் 4ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டியாகும்.  

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிபி-யின் (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘மிகப்பெரிய தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும். ஜுன் 4ம் தேதி போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இந்தியாவுக்கு எதிரான போட்டி என்பதோடு மட்டுமல்லாமல், நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறவும் இது உதவும்’ என்றார்.


.

மூலக்கதை