பிளேஆஃப் சுற்றை பிரகாசப்படுத்திய புனே!

PARIS TAMIL  PARIS TAMIL
பிளேஆஃப் சுற்றை பிரகாசப்படுத்திய புனே!

 ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீ்ழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
 
தொடக்க வீரர்களாக ரகானேவும், திரிபாதியும் களம் இறங்கினார்கள். அதிரடி வீரர் திரிபாதி 1 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். அத்துடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரன்வேட்டையில் தொய்வு ஏற்பட்டது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 34 ரன்னும், ரகானே 22 ரன்னும் சேர்த்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய டோனி 21 பந்தில் 31 ரன்கள் சேர்க்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. புனே அணி வீரர்கள் நேர்த்தியாக பந்து வீசினார்கள். இதனால் தொடக்க வீரர்களான தவான் மற்றும் வார்னர் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. தவான் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
 
அடுத்து வார்னர் உடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 34 பந்தில் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வார்னர் ஆட்டம் இழந்தார். அத்துடன் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 
 
இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி மூன்று ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் யுவராஜ் சிங், நமன் ஓஜா ஆகியோரை வெளியேற்றினார்கள். 43 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ஆட்டம் இழந்தனர்.
 
 
கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் ஐதராபாத் அணி 9 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது, இந்த ஓவரை உனத்கட் வீசினார். 2வது, 3-வது மற்றும் 4-வது என தொடர்ச்சியாக மூன்று பந்தில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.
 
கடைசி இரண்டு பந்திலும் ரன் ஏதும் அடிக்காததால், ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனே 8 வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
 

மூலக்கதை