வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ...

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

  ஸ்னேகா, ரோகினி, ஆர். ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் சிவகார்த்திகேயன் சேரி இளைஞராக நடிப்பதாக முன்பே கூறியிருந்தோம்,  உணவை வைத்து நடக்கும் அரசியல் குறித்து இப்படம் இருக்கும் என கூறுகின்றனர்.   இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு மில்லில் வேலைப்பார்க்கும்  தொழிலாளியாக நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மலேசியா சென்றுள்ள படக்குழு அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும், அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள்  படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.     அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ. எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

.

மூலக்கதை