சமந்தாவுக்கு மீண்டும் சரும பிரச்சினை?

தினமலர்  தினமலர்
சமந்தாவுக்கு மீண்டும் சரும பிரச்சினை?

நடிகை சமந்தாவுக்கு வெயில் அலர்ஜி உண்டு என்பது ஊரறிந்த ரகசியம். நீண்ட நேரம் வெயிலில் நின்றாலோ, அல்லது அதிக வெளிச்சம் கொண்ட விளக்கின் முன் நின்றாலோ அவரது நிறம் சிவந்து விடும். கடுமையான வேதனையை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். இந்த சரும பிரச்சினை காரணமாகவே அவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்கவில்லை. காரணம் படப்பிடிப்பு முழுவதும் வெயில் நிறைந்த கடற்கரை பகுதியில் நடக்கும் என்பதால். அதுபோன்றே ஐ பட வாய்ப்பையும் தவிர்த்தார்.
வெற்றி மாறன் இயக்கும் வடசென்னை படத்தின் படப்பிடிப்புகள் கடும் வெயில் காலத்தில் படப்பிடிப்பு என்பதாலேயே அதனையும் தவிர்தார் என்று கூறப்படுவதுண்டு. இந்த ஆண்டு முன் எப்போதையும் விட கடுமையான வெயில் அடிப்பதால் சமந்தா கடும் பாதிப்புக்கு உள்ளாகி அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக பிறந்தநாளை வெளிப்படையாக கொண்டாடும் சமந்தா நேற்று முன்தினம் (28ந் தேதி) தனது பிறந்த நாளை அடக்கி வாசித்தார். வருங்கால கணவர் நாக சைதன்யாவுடன் கேக் வெட்டிய, முத்தம் பரிசளித்த படங்களை மட்டும் வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டார்.

மூலக்கதை