சர்கார் 3 க்கு யமியை தேர்வு செய்தது ஏன்?

தினமலர்  தினமலர்
சர்கார் 3 க்கு யமியை தேர்வு செய்தது ஏன்?

டைரக்டர் ராம் கோபால் வர்மா, சர்கார் 3 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சர்கார் 3 படத்திற்காக யமி கவுதமை தேர்வு செய்தது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யமி கவுதம் பார்ப்பதற்கு அப்பாவியாகவும், அழகாகவும் இருக்கிறார். அதனால் தான் அவரை எனது படத்தில் நடிக்க வைத்தேன். அத்துடன் நான் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யத்தை அளிக்க விரும்பி தான் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தேன் என்றார். சர்கார் 3 படத்தில் அமிதாப் பச்சனால் கொல்லப்படும் ஒருவரின் மகளாக யமி கவுதம் இப்படத்தில் நடித்துள்ளார். சர்கார் 3 படம் இந்த ஆண்டு மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது.

மூலக்கதை