ஐ.பி.எல்.சீசன் 10 : சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

தினகரன்  தினகரன்

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்டசமாக இஷான் கிஷான் 48 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் பந்து வீச்சில் பூம்ரா 4, ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் மும்பை - குஜராத் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து 1 ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் களமிறங்கிய குஜராத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூலக்கதை