பிளிப்கார்ட் போட்டியை சமாளிக்கஅமேசான் தொடர்ந்து முதலீடு

தினமலர்  தினமலர்
பிளிப்கார்ட் போட்டியை சமாளிக்கஅமேசான் தொடர்ந்து முதலீடு

புதுடில்லி:உல­கின் முன்­னணி மின்­னணு வர்த்­தக நிறு­வ­ன­மான, அமே­சான், இந்­தி­யா­வில், தொடர்ந்து முத­லீடு செய்ய உள்­ளது. இந்த முத­லீ­டு­கள், இந்­திய சந்­தை­யில் நிறு­வ­னத்தை தொழில்­நுட்­பத்­தி­லும் உள்­கட்­ட­மைப்­பி­லும் வலு­வா­ன­தாக மாற்ற பயன்­ப­டுத்­தப்­படும் என, அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, அமே­சான் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யும், அதன் நிறு­வ­ன­ரு­மான, ஜெப் பிசோஸ் கூறியதா­வது:இந்­தி­யா­வில் எங்­கள் நிறு­வ­னம் மிக விரை­வான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. இந்­திய டீம் மிக வேக­மாக செயல்­ப­டு­கிறது. விற்­ப­னை­யா­ளர்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விரை­வான வினி­யோ­கத்தை வழங்­கு­கிறது. இந்­தி­யா­வில் மின்­னணு வர்த்­த­கம் துவங்­கிய நாள் முதலே, அமே­சான் இருந்து வரு­கிறது. தொழில்­நுட்­பம், உள்­கட்­டு­மா­னம் ஆகி­ய­வற்­றில் தொடர்ந்து முத­லீடு செய்து வரு­வோம்.இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தின் போட்­டியை சமா­ளிக்க, அமே­சா­னுக்கு இந்த முத­லீ­டு­கள் உத­வி­க­ர­மாக இருக்­கும் என, கரு­தப்­ப­டு­கிறது. அண்­மை­யில் அமே­சா­னின் போட்­டியை சமா­ளிக்க, பிளிப்­கார்ட், 1.4 பில்­லி­யன் டாலர் நிதியை திரட்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை