மரீன் லூ பென்னுக்கு ஆதரவு அளிக்கும் Nicolas Dupont-Aignan! - பரபரப்பாகும் இறுதிக்கட்ட தேர்தல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மரீன் லூ பென்னுக்கு ஆதரவு அளிக்கும் Nicolas DupontAignan!  பரபரப்பாகும் இறுதிக்கட்ட தேர்தல்!!

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று நெருங்கிவரும் வேளையில், வேட்பாளர்களான இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் இருவருக்குமான ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு வேட்பாளரான Nicolas Dupont-Aignan, மரீன் லூ பென்னுக்கு ஆதரவளித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பத்திரிகை ஒன்றுக்கு Nicolas Dupont-Aignan இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்று வெள்ளிகிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக மரீன் லூ என்னை சந்தித்த Nicolas Dupont-Aignan, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 'நாங்கள் அரசியல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்!' என குறிப்பிட்டுள்ளார்.  மரீன் லூ பென்னுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மானுவல் மக்ரோனுக்கு தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், மரீன் லூ பென்னுக்கும் கணிசமான ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மரீன் லூ பென்  தனது டுவிட்டர் கணக்கில் Nicolas Dupont-Aignan க்கு நன்றி தெரிவித்துள்ளார். 
 
மரீன் லூ பென்னுக்கு, Dupont-Aignan வழங்கிய ஆதரவுக்கு François Bayrou கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கும் போது, 'இது ஒரு மகத்தான அவமானம்!' என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை