உத்தப்பா, கம்பீர் அதிரடி டேர்டெவில்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. கருண் 15, சாம்சன் 60 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரிஷப் பன்ட் 6, ஷ்ரேயாஸ் 47 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஆண்டர்சன் 2, மோரிஸ் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பாவ்னே 12, கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் கோல்டர்நைல் 3, உமேஷ், நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து எளிதாக வென்றது. நரைன் 4 ரன், உத்தப்பா 59 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் பாண்டே 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கம்பீர் - உத்தப்பா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கம்பீர் 71 ரன் (52 பந்து, 11 பவுண்டரி), ஜாக்சன் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கம்பீர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  அவர் 9 லீக் ஆட்டத்தில் 376 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்த, உத்தப்பா 331 ரன்னுடன் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

மூலக்கதை