20 சதம் திருடியவரிற்கு ஒருமாதச் சிறைத்தண்டனை!!

PARIS TAMIL  PARIS TAMIL
20 சதம் திருடியவரிற்கு ஒருமாதச் சிறைத்தண்டனை!!

20 சதத்தைத் திருடிய ஒருவரிற்கு Laon குற்றவியல் நீதிமன்றம் ஒரு மாதச் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. ஜோந்தார்மினர்க்கு வேலை செய்யும் ஒரு வாகனத் திருத்தகததில் விடப்பட்டிருந்த, ஜோந்தார்மினரின், வாகனத்திற்குள், களவாகத் தேடுதல் வேட்டை நடாத்திய இந்த நபர், அதற்குள் இருந்த 20 சதத்தைத் திருடியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டுள்ளார்.
 
«சட்டத்திற்கு முன் முட்டை திருடுபவன், நாளை முழு மாட்டையும் திருடுவான்» (Pour la justice, qui vole un oeuf vole un boeuf!) என்ற அடிப்படையில் இவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.
 
ஆனால் நீதிமன்றம் இவரிற்குச் சிறைத் தண்டனை விதிக்கக்காரணம், இவரது குற்றப்பத்திரிக்கையில் (casier judiciaire) ஏற்கனவே பதின்மூன்று திருட்டுக் குற்றங்கள் பதிவாகி உள்ளமைதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
20 சதம் இருந்த இடத்தில் 200€ இருந்திருந்தாலும் இந்தநபர் திருடியே இருப்பார் என்று கூறிய நீதிபதி, திருடிய தொகை சிறிதென்றாலும், இந்தத் தண்டனையைத் தான வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை