மரின் லூப்பனிற்கு வாக்ளிக்க வேண்டாம் - உதைபந்தாட்ட வீரர் சிதான்

PARIS TAMIL  PARIS TAMIL
மரின் லூப்பனிற்கு வாக்ளிக்க வேண்டாம்  உதைபந்தாட்ட வீரர் சிதான்

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் உலக் கோப்பையைக் கைப்பற்றிய சமயம், மிகவும் பிரபலமாகிய வீரரான சிதான் (Zinédine Zidane), தேசிய முன்னணியின் (FN) வேட்பாளர் மரின் லூப்பனிற்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
இந்தத் தீவிர வலதுசாரிகளிற்கான வாக்கினை முயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள் என, தற்போது ரியால் மட்ரிட்டின் பயிற்றுநராக உள்ள சிதான் தெரிவித்துள்ளார்.
 
 
2002 ஆம் ஆண்டுத் தேர்தலின் பேது எங்களிற்கு இந்தப் பயம் இருக்கவில்லை எனவும், தீவிரம் என்பது எதிலுமே அழிவைக் கொண்டு வரும்' எனவும் தெரிவித்திருக்கும் சிதான், தீவிர வலதுசாரிகளைப் புறக்கணிக்கும் படி கோரியுள்ளார்.
 

மூலக்கதை