ஆசிய பேட்மின்டன் கால் இறுதியில் சிந்து

தினகரன்  தினகரன்

வுஹான்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார். சீனாவில் நடைபெறும் இத்தொடரின் 2ம் சுற்றில் உலகின் 3ம் நிலை வீராங்கனையான சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்த்து விளையாடினார். இதில் சிறப்பாக ஆடிய சிந்து, 21-14, 21-15 என்ற நேர் செட்களில் ஒஹோரியை 40 நிமிடத்தில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 19-21, 10-21 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் ஹுசு ஜென் ஜோவிடம் தோல்வி அடைந்தார்.

மூலக்கதை