தேர்தல் முடிவின் எதிரொலி! - மாணவர்கள் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தேர்தல் முடிவின் எதிரொலி!  மாணவர்கள் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்!!

இன்று வியாழக்கிழமை காலை பரிசில் உள்ள சில உயர்கல்வி பாடசாலை முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நான்கு பாடசாலைகள் ( Lycée) முற்றாக தடுக்கப்பட்டு பாடசாலைகள் முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மேலும் சில பாடசாலைகளும் ஓரளவு தடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி கற்கும் பல மாணவர்கள், இடம்பெற்ற முதல்கட்ட தேர்தலின் முடிவில் இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகியிருப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பாசிச வாசிகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இடபெற்றதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தவிர இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு சமூக வலைத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளது. 
 
தவிர, பரிசின் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள Lycée Voltaire க்கு முன்பாக ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சில கலவரங்களும் ஏற்பட்டுள்ளன. சிலர் கற்கள், உடைந்த கண்ணாடித்துண்டுகள் போன்றவற்றை எறித்தும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை