‘இலங்கைக்கு வரப்பிரசாதம்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘இலங்கைக்கு வரப்பிரசாதம்’

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு, சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (26) காலை நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

உலகளாவிய வர்த்தகத்தில் இன்று நாம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி உலக வர்த்தக மையத்தின் அழுத்தங்களின் காரணமாக வராலாற்று முக்கியத்துவமிக்க வர்த்தக வசதிகள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

 21 வருடகால வரலாற்றைக் கொண்ட உலக வர்த்தக மையத்தின் முயற்சியினால் இந்த வர்த்தக வசதிகள் உடன்படிக்கைக்கு 164 நாடுகள் இணக்கம் தெரிவித்தன.

வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் கீழ் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் அமைக்கப்பட்ட தேசிய வர்த்தக வசதிகள் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது அமைச்சின் கீழான வணிக சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் நான் மனநிறைவடைகின்றேன்.

வர்த்தக  வசதிகள் உடன்பாடு தொடர்பிலும் இலங்கையில் அதனை அமுல்படுத்துவது தொடர்பிலும் நான் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையின் வர்த்தக வசதிகள் செயலகம் வசதியான கட்டமைப்புக்கள் கட்டுப்பாடில்லாத வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் வர்த்தகத்துறையில் பலமான இலகுவான வர்த்தகப் பறிமாற்றங்களை ஏற்படுத்த இது உதவியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் பிரதான இலக்கை அடைவதற்கும் இது வழிவகுத்துள்ளது. உலக வங்கியின் உதவிகளைப் பெறுவதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மூலக்கதை