மின்மினிக்காக விஷ்ணு விஷால் உடன் இணைந்த அமலாபால்

PARIS TAMIL  PARIS TAMIL
மின்மினிக்காக விஷ்ணு விஷால் உடன் இணைந்த அமலாபால்

 வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்' படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அடுத்து 'முண்டாசுப்பட்டி' பட இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானநிலையில், இப்போது அந்த படத்திற்கு தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

 
'மின்மினி' என்பதே தற்போது சூட்டப்பட்டுள்ள தலைப்பு. இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வரவிருக்கிறது. தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் கால்ஷீட் இல்லை என்று நடிக்க மறுத்த அமலாபால், தற்போது மின்மினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
விஷ்ணு விஷாலைவிட தனுஷை பல மடங்கு மார்க்கெட் மதிப்புமிக்க ஹீரோ. அவருடன் நடிப்பதை நிராகரித்துவிட்டு விஷ்ணுவிஷால் உடன் நடிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனுஷ் உடன் இணைத்து கிசுகிசு வந்ததை அடுத்து, களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா தனுஷ், அமலாபால் உடன் தகராறு செய்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை