மதுர வீரனில் வில்லனாக மிரட்டும் மொட்டை ராஜேந்திரன்

தினமலர்  தினமலர்
மதுர வீரனில் வில்லனாக மிரட்டும் மொட்டை ராஜேந்திரன்

சகாப்தம் படத்தை அடுத்து விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடிக்கும் படம் மதுர வீரன். மதுரைக்கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மதுரையைச்சுற்றியுள்ள பகுதிகளில்தான் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் பூஜை நடந்த நிலையில், தற்போது அப்பட யூனிட் மதுரையில் முகாமிட்டிருக்கிறது. இந்த படத்தை சண்முகப்பாண்டியனுக்கு எப்படியேனும் வெற்றிப் படமாக்கி விட வேண்டும் என்பதற்காக கமர்சியல் நடிகர்கள் பலரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முக்கியமாக, கதைப்படி இந்த படத்தில் சண்முகப்பாண்டியனின் அப்பாவாக சமுத்திரகனி நடிக்கிறார். அவரது நண்பராக பாலசரவணன் நடிக்க, வில்லனாக மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறாராம். நான் கடவுள் படத்தில் கொடூரமான வில்லனாக அறிமுகமான ராஜேந்திரன், பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப்பிறகு காமெடியனாகி விட்டார். தற்போது வரை அவரது காமெடி மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது. இருப்பினும் இந்த படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். முக்கியமாக அவரைப்பார்த்து ரசிகர்கள் சிரித்து விடக்கூடாது என்பதற்காக, அவரது கெட்டப்பை பயங்கரமான தோற்றத்துக்கு மாற்றுகிறார்களாம்.

மூலக்கதை