நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் சாமிக்கண்ணு சிலை வைக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் சாமிக்கண்ணு சிலை வைக்க கோரிக்கை

முதன் முறையாக தமிழ் நாட்டுக்குள் சினிமாவை கொண்டு வந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி பொன்மலை ரெயில்வே அதிகாரியான அவர் தனது உயர் அதிகாரி ஒருவரிடம் படம் காட்டும் எந்திரம் (புரொஜக்டர்) ஒன்றை வாங்கினார். வெளிநாடுகளில் இருந்து துண்டு படங்களை வரவழைத்து அதை ஊர் ஊராக சென்று போட்டுக்காட்டினார். அதன் பிறகு கோவையில் வெரைட்டி ஹால் என்ற நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தமிழ்நாட்டில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டர் அது.

சாமிக்கண்ணு பிறந்த நாளையொட்டி அன்றைய தினத்தை திரையரங்கு நாளாக சில அமைப்புகள் கொண்டாடி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கமலா தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. விழாவை நடத்திய அமைப்பின் நிர்வாகிகளான திருநாவுக்கரசு, செந்தில் நாயகம், ஆனந்த வரதராஜன் ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷாலை சந்தித்து புதிதாக கட்டப்பட இருக்கும் நடிகர் சங்கத்தில் சாமிக்கண்ணு உருவச்சிலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட விஷால் இதுகுறித்து செயற்குழுவில் பேசி சிலை அமைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

மூலக்கதை