1996க்கு பின்னர் இதுதான் சரியான சமயம். ரஜினி ஆதரவாளர்கள் கருத்து

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
1996க்கு பின்னர் இதுதான் சரியான சமயம். ரஜினி ஆதரவாளர்கள் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டே அரசியலில் குதித்திருக்க வேண்டும் என்றும் அந்த அரிய வாய்ப்பை அவர் மிஸ் செய்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் உள்பட் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ரஜினிக்கும் அரசியல் ஆசை இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா காரணமாகவே அவர் அரசியலில் குதிக்காமல் இருந்தார்இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை, கருணாநிதியும் செயல்படும் நிலையில் இல்லை. எனவே மீண்டும் அரசியலில் குதிக்க இதுதான் அரசியலில் குதிக்க சரியான சமயம் என்று ரஜினிக்கு ஒருசிலர் அறிவுறுத்தி வந்தனர்.

இதற்கு ஏற்றாற்போல் ரஜினி இலங்கை செல்லும் முடிவை ஒருசில அரசியல்வாதிகள் தடுத்தது அவரை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் 10 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை வருகிற 2-ந்தேதி கூட்டி  இருக்கிறார். இதற்கான கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அன்று காலை 9.30  மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ரஜினி பங்கேற்க மாட்டார் என்றும் அவரது சார்பில் ஒரு முக்கிய நபர் கலந்து கொள்வார் என்றும் ரஜினி அரசியலில் ஈடுபடும் முக்கிய அறிவிப்பு இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜகவில் இணைவார் அல்லது புதிய கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை