3 துயர சம்பவங்கள் பட விழா ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 துயர சம்பவங்கள் பட விழா ரத்து

ஒரே நாளில் நடந்த 3 துயர சம்பவங்களால் கோலிவுட் துக்கத்தில் ஆழ்ந்தது. காமெடி நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி.

இவர் மதுரை ஒத்தக்கடை ராஜாக்கூரில் வாழ்ந்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 75. முன்னதாக ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சூரியின் தந்தை மறைவு காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

விரைவில் திரைக்குவரவிருக்கும் ‘கவண்’ படத்தை இயக்கியிருக்கிறார் கே. வி. ஆனந்த். அதற்கான புரமோஷன் மற்றும் ரிலீஸ் பணிகளில் மும்முரமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவரது தந்தை கே. எம். வெங்கடேசன் உடல் நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகர் மறைந்த சீர்காழி கோவிந்தராஜனின் மனைவி சுலோசனா மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

சீர்காழி கோவிந்தராஜன், சுலோசனாவின் மகன் சீர்காழி சிவசிதம்பரமும் பிரபல பாடகர் ஆவார்.

.

மூலக்கதை