பணம் தேடும் புதுமுகங்கள் வாழ்க்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணம் தேடும் புதுமுகங்கள் வாழ்க்கை

பணம் சம்பாதிக்க தெரியாமலிருந்தால் வாழ முடியாது. உழைத்து சம்பாதிக்க சோம்பேறித் தனப்படும் 4 பேர் உடனே பணக்காரன் ஆக நினைத்து செய்கிற காரியம் அவர்களை டெட் என்ட் (முட்டுச்சந்து) சாலைக்குள் நுழைந்ததுபோன்று மீள வழிதெரியாமல் திணறடிக்கிறது.

வாழ்க்கையின் விதிகளை மதிக்காமல் எல்லையை தாண்டி ஓடும் இவர்களின் நிலை என்ன ஆகிறது என்பதை உணர்த்துகிறது ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படம். கார்த்திகேயன், ஷாரியா, இவன், ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அருள்ஜோதி நடிக்கின்றனர்.

ஆர். செல்வராஜ், தினேஷ் செல்வராஜ் கதை எழுதியுள்ளனர். ஆல்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பு.

நவின் பியோன் சரோ இசை. ஏ. டி. பகத்சிங் ஒளிப்பதிவு.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை பார்த்து பாரதிராஜா படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

.

மூலக்கதை