3வது முறை இணையும் விஜய் - முருகதாஸ் படம் அக்.,-ல் ஆரம்பம்

தினமலர்  தினமலர்
3வது முறை இணையும் விஜய்  முருகதாஸ் படம் அக்.,ல் ஆரம்பம்

'கத்தி' படத்திற்குப் பிறகு ஹிந்தியில் 'அகிரா' என்ற படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அகிரா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தற்போது மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தை முடித்த பிறகு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். 'கத்தி' படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே இந்த புதிய படத்தையும் தயாரிக்க உள்ளது. தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவருடைய உதவியாளர்கள் மும்முரமாக உள்ளனர்.

மகேஷ்பாபு படத்தின் வேலைகள் முடிவடைந்த பின்னர் விஜய் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் முதல் துவங்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் முருகதாஸ். துப்பாக்கி, கத்தி படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த புதியபடம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

மூலக்கதை