லண்டனில் மோசடியாளரை பிடிக்க முற்பட்ட இலங்கை பெண் ஆபத்தான நிலையில்...

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனில் மோசடியாளரை பிடிக்க முற்பட்ட இலங்கை பெண் ஆபத்தான நிலையில்...

 லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சிறிலங்கா பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 
லண்டனிலுன்ள கடையொன்றில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புடைய ஒருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
சிறிலங்காவை சேர்ந்த 30 வயதான கர்ப்பிணி பெண்ணொருவரே உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
 
குறித்த பெண் வேலை செய்யும் Leigh-on-Sea,Essex பகுதியில் உள்ள  கடையில் இடம்பெற்ற மோசடியை தடுத்த முற்பட்ட போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
 
இந்தப் பெண் வோக்வேகன் கொல்ப் என்ற வாகனத்தில் மோதுண்டமையினால் முகம் மற்றும் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 
கர்ப்பிணி பெண்ணான அவரின் குழந்தைக்கு எதுவித ஆபத்தும் இதுவரை ஏற்படவில்லைஎன Essex பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த பெண் 4 அல்லது 5 மாத கர்ப்பிணி பெண் என பெயர் குறிப்பிடப்படாத நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருத்திற்கு முன்னரே அவர் இலங்கையில் இருந்து பிரித்தானியாகவுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரின் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை