நவரத்தினங்கள் – ஆபரணங்கள் துறைக்கு ஜி.எஸ்.டி., சாப்ட்வேர் தயார்

தினமலர்  தினமலர்
நவரத்தினங்கள் – ஆபரணங்கள் துறைக்கு ஜி.எஸ்.டி., சாப்ட்வேர் தயார்

மும்பை : நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் வர்த்­தக கூட்­ட­மைப்­பின் தலை­வர் நிதின் கந்­தல்­வால் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, ஜூலை 1ல் அம­லுக்கு வரு­கிறது. இந்த வரி விதிப்பை, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் நகை வியா­பா­ரி­கள் பின்­பற்­று­வ­தற்­காக, தனி சாப்ட்­வேர் உரு­வாக்­கும் பணி­கள் முடி­வ­டைந்து விட்­டன. இதை­ய­டுத்து, நாடு முழு­வ­தும் உள்ள நகை விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு, வலை­த­ளம் மூலம், சாப்ட்­வேர் பயன்­பாடு குறித்து பயிற்சி அளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்றன. இதன் மூலம், அனைத்து நகை வியா­பா­ரி­களும், சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., வரியை பின்­பற்ற முடி­யும்.
இந்த வரி விதிப்பை, எங்­கள் கூட்­ட­மைப்பு வர­வேற்­கிறது. ஆனால், சில அம்­சங்­கள் குறித்து, அர­சி­டம் பேச்சு நடத்தி வரு­கி­றோம். குறிப்­பாக, நகை விற்­ப­னைக்கு, 1.25 வரி விதிக்க கோரு­கி­றோம். அதற்கு மேற்­பட்ட வரி விதிக்­கப்­பட்­டால், அது, தொழிலை பாதிக்­கும். அது­போல, ‘கிரெ­டிட், டெபிட்’ கார்­டு­களை பயன்­ப­டுத்தி நகை வாங்­கு­வோ­ருக்கு, பரி­வர்த்­தனை கட்­ட­ணத்தை தள்­ளு­படி செய்ய கோரிக்கை விடுத்­துள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை