பிரான்சிற்கெதிரான பிரச்சாரத்தில் சீனத் தொலைக்காட்சி!! முரண்படும் வாக்குமூலங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சிற்கெதிரான பிரச்சாரத்தில் சீனத் தொலைக்காட்சி!! முரண்படும் வாக்குமூலங்கள்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவற்துறையினரைத் தாக்கிய Shaoyo Liu வின் விவகாரம் தொடர்ச்சியான பரபரப்பை எற்படுத்தி வருகின்றது.
காவற்துறையினரின் காவற்துறையினரான IGPN (Inspection générale de la police nationale)  இற்கு வாக்குமூலம் வழங்கிய குற்றத்தடுப்புப் பிரிவினர், தாங்கள், குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த வீட்டிற்குச் சென்றதாகவும், அங்கு கதவைத் திறந்த வந்த நபர், கத்திரிக்கோல் போன்ற கூரிய ஆயுதத்தால் தம்மைத் தாக்கியதாகவும், அதனால் தற்காப்பிற்காகச் சுடவேண்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு காவற்துறையினரும் காயமடைந்துள்ளனர். ஒருவர் மிகவம் ஆபத்தான காயங்களிற்கு உள்ளாகியும் உள்ளார். இதன் தொடர்ச்சியாகத் தாங்கள் செய்த முதலுதவிகளும், செயற்கை இதயத்துடிப்பை ஏற்படுத்தும் முயற்சியும், தோல்லிவயடைந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொல்லப்பட்ட இந்த நபரின் இரண்டு மகள்களும், முற்றிலும் எதிரான வாக்கு மூலங்களை வழங்கி உள்ளனர். வீட்டின் கதவு தட்டப்பட்டதாகவும், தனது தங்கை கதவினூடாகப் பார்தபொழுது, ஒரு பெண் உட்பட மூன்று காவற்துறையினர் நின்றதாகவும், கதவில் தட்டும் சத்தம் அதிகரிக்வே, 'அமைதியாக இருங்கள். சத்தம் போடாதீர்கள்' எனக் கத்திக்கொண்டு, மீன் வெட்டிக் கொண்டு நின்ற கத்தியுடன் வந்த தந்தை கதவருகில் சென்றதாகவும், அதற்குள் கதவை உடைத்துக் கொண்டு வந்த காவற்துறையினர் தந்தையைச் சுட்டதாகவும், சீனத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தள்ளனர். இந்தத் தொலைக்காட்சி பிரான்ஸ் காவற்துறையினர்க்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

தங்களைக் காவற்துறையினர் வேறொரு அறையில் வைத்திருந்ததாகவும், 22 மணிக்கே கணவர் இறந்ததை அறிவித்ததாகவும் இறந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். ஆசிய சமூகத்திற்கான ஆலோசனை மையத்தின் தலைவர் துயஉஙரநள ளுரn காவற்துறையினரின் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை