‛இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‛ஏஏஏ' நடிகர்கள்

தினமலர்  தினமலர்
‛இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‛ஏஏஏ நடிகர்கள்

அருள்நிதி - மஹிமா நம்பியார் ஆகியோர் நடிக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தற்போது நடிகர்கள் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

அருள்நிதி - அஜ்மல் - ஆனந்தராஜ் ஆகியோரின் புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மு.மாறன். வருகிற மார்ச் 31-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

மூலக்கதை