மகேஷ்பாபு பிறந்த நாளில் ஸ்பைடர் பட டிரைலர்

தினமலர்  தினமலர்
மகேஷ்பாபு பிறந்த நாளில் ஸ்பைடர் பட டிரைலர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. மேலும், இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு திரையரங்கு உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. லைகா பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஸ்பைடர் உரிமையை பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது ஸ்பைடர் படத்தில் ஒரு பாடல் தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அந்த ஒரு பாடல் காட்சியும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐரோப்பாவில் நடக்கிறது. மேலும் செப்டம்பர் 27-ந்தேதி ஸ்பைடர் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மகேஷ்பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ந்தேதி படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

மூலக்கதை