திறன் வளர்ப்பு பயிற்சியில் தமிழகத்திற்கு 3வது இடம்

தினமலர்  தினமலர்
திறன் வளர்ப்பு பயிற்சியில் தமிழகத்திற்கு 3வது இடம்

மும்பை : தேசிய திறன் வளர்ப்பு பயிற்சி திட்­டத்­தின் கீழ், தமி­ழ­கம், 8.45 லட்­சம் பேருக்கு பயிற்சி அளித்து, மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ளது.

மஹா­ராஷ்­டிரா, 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோ­ருக்கு, வேலை­வாய்ப்­புக்­கான திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. தேசிய திறன் மேம்­பாட்டு கழ­க­மான, என்.எஸ்.டி.சி., தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, ஜவுளி, ஆயத்த ஆடை­கள், நிதி, ஐ.டி., தொலை தொடர்பு உள்­ளிட்ட, பல்­வேறு துறை­களில் திறன் வளர்ப்பு பயிற்சி திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது.

இத்­திட்­டங்­களில், 15 – 59 வய­து­டை­யோர் இணைந்து, தங்­க­ளுக்கு விருப்­ப­மான துறை­யில் திறன் பயிற்சி பெற்று, வேலை­வாய்ப்­பு­களை பெறு­கின்­ற­னர்.இந்த வகை­யில், மஹா­ராஷ்­டி­ரா­வில், 2011 முதல், இந்­தாண்டு ஜூன் இறுதி வரை, 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், 40க்கும் மேற்­பட்ட துறை­களில் திறன் பயிற்சி பெற்­றுள்­ள­னர். இம்­மா­நில அரசு, 2022ல், 4.50 கோடி பேருக்கு, வேலை­வாய்ப்­புக்­கான திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

இது குறித்து, என்.எஸ்.டி.சி., நிர்­வாக இயக்­கு­னர் மனீஷ் குமார் கூறி­ய­தா­வது:நாடு முழு­வ­தும் உள்ள இளை­ஞர்­கள், வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்கு தேவை­யான திறன் வளர்ப்பு பயிற்­சியை, நிறு­வ­னம் வழங்கி வரு­கிறது. கடந்த ஓராண்­டில், மூன்று லட்­சம் பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்­கப்­பட்­டது. அதில், 45 சத­வீ­தம் பேர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். இத்­த­கைய பயிற்­சி­யில், மஹா­ராஷ்­டிரா முத­லி­டத்­தில் உள்­ளது. இங்கு பயிற்சி பெற்­றோ­ரில், 60 சத­வீ­தம் பேர் பெண்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. உ.பி., 8.50 லட்­சம் பேருக்கு பயிற்சி அளித்து, இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை