மொபைல் போன் நிறுவனங்கள் வருவாய்க்கு ‘ஆர்ஜியோ போன்’ உதவும்

தினமலர்  தினமலர்
மொபைல் போன் நிறுவனங்கள் வருவாய்க்கு ‘ஆர்ஜியோ போன்’ உதவும்

மும்பை : தர நிர்­ணய நிறு­வ­மான, ‘பிட்ச்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ரிலை­யன்ஸ், செப்­டம்­ப­ரில் வெளி­யிட உள்ள, விலை­யற்ற, ‘ஆர்­ஜியோ போன்’ மூலம், கூடு­த­லாக, 10 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை பெறும். இத­னால், 2018ல், வரு­வாய் சந்தை பங்கு, 10 சத­வீ­தம் உய­ரும். தொலை தொடர்பு சேவை துறை­யின் ஆண்டு வரு­வாய், 3 – 4 சத­வீ­தம், அதா­வது, 95 கோடி டாலர் அள­விற்கு அதி­க­ரிக்­கும்.

முதன்­மு­றை­யாக, ‘4ஜி’ தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வோர், ஆர்­ஜி­யோ­வின் வரு­வாய் சந்­தை­யின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க துணை புரி­வர். கிரா­மப்­பு­றங்­களில், ‘2ஜி’ மொபைல் போன்­களின் பயன்­பாடு முடி­விற்கு வரும். ஆர்­ஜி­யோ­வின், மாதம், 153 ரூபாய் கட்­ட­ணம், தற்­போது கிரா­மப்­பு­றத்­தில், தனி­ந­பர் ஒரு­வர், தொலை தொடர்பு சேவைக்­காக செல­வி­டு­வதை விட, 50 சத­வீ­தம் அதி­கம்.

இத­னால், ஆர்­ஜி­யோ­வின் வரு­வாய் உய­ரும். அதி­க­ள­வில் இல­வச அழைப்­பு­களும், தக­வல் பரி­மாற்­றங்­களும் நடை­பெ­றும் என்­ப­தால், போட்டி நிறு­வ­னங்­களின் வரு­வா­யும் பெரு­கும். ஒட்­டு­மொத்த அள­வில், சரி­வ­டைந்து வந்த தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­களின் வரு­வாய் அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை