அடுத்த 5 ஆண்டுகளில்... ‘இன்வெர்ட்டர் ஏசி’ விற்பனை 37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
அடுத்த 5 ஆண்டுகளில்... ‘இன்வெர்ட்டர் ஏசி’ விற்பனை 37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

மும்பை : ‘மக்­கள், மின் செலவை குறைப்­ப­தில் தீவி­ர­மாக உள்­ள­தால், மின் சிக்­க­னத்­திற்­கான, ‘இன்­வெர்ட்­டர் ஏசி’ சாத­னங்­கள் விற்­பனை, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 37 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

வீடு­களில் பயன்­ப­டுத்­தும், ‘ஏசி’ சாத­னங்­கள் குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: நாடு முழு­வ­தும், மின் வசதி பர­வ­லாகி வரு­கிறது. இத­னால், மின் சாத­னங்­களின் தேவை­யும் அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, வீடு­களில் பயன்­ப­டுத்­தும், ‘ஏசி’ சாத­னங்­கள் விற்­பனை விறு­வி­றுப்­பாக உள்­ளது. பல ஆண்­டு­க­ளாக மின்­சா­ரம் இல்­லாத பகு­தி­கள் கூட, தற்­போது மின் வசதி பெற்­றுள்ளன. அத­னால், வெப்­பத்­தின் தாக்­கத்தை சமா­ளிக்க, ‘ஏசி’ சாத­னங்­களை வீடு­களில் பொருத்­து­வது அதி­க­ரித்து வரு­கிறது.

தற்­போது, ‘ஏசி’ சந்­தை­யின் மதிப்பு, 11 ஆயி­ரத்து, 600 கோடி ரூபா­யாக உள்­ளது. அடுத்த 5 – 6 ஆண்­டு­களில், அறை­க­ளுக்­கான, ‘ஏசி’ சாத­னங்­கள் சந்தை, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 12 – 13 சத­வீ­தம் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. நகர்ப்­புற கட்­ட­மைப்பு வசதி, போக்­கு­வ­ரத்து ஆகி­ய­வற்­றுக்கு, மத்­திய, மாநில அர­சு­களின் நிதி ஒதுக்­கீடு அதி­க­ரித்­துள்­ளது. அத்­து­டன், வணிக ரியல் எஸ்­டேட் துறை, மீண்­டும் எழுச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இது போன்ற கார­ணங்­க­ளால், ‘ஏசி’ சாத­னங்­களின் விற்­பனை அதி­க­ரிக்­கும்.

அறை­க­ளுக்­கான, ‘ஏசி’ சந்­தை­யில், ‘இன்­வெர்ட்­டர் ஏசி’ பிரிவு வேக­மாக வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வகை, ‘ஏசி’ சாத­னங்­களின் மின் பயன்­பாடு குறை­வாக உள்­ளதே, இதற்கு கார­ணம். மேலும் இவை, வழக்­க­மான, ‘ஏசி’யை விட, சப்­தம் குறை­வா­க­வும், கூடு­த­லா­க­வும் உழைக்­கின்றன. அத­னால், மக்­கள், மின் செலவை குறைக்­கும் நோக்­கில், ‘இன்­வெர்ட்­டர் ஏசி’யை வாங்க ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். இதன் கார­ண­மாக, ஒரே வேகத்­தில் செயல்­படும், ‘கம்ப்­ர­ஸர்’ பொருத்­திய வழக்­க­மான, ‘ஏசி’யை விட, தேவைக்­கேற்ற மின் சக்­தி­யில் இயங்­கும், ‘இன்­வெர்ட்­டர் ஏசி’யின் சந்தை பங்­க­ளிப்பு, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், தற்­போ­தைய, 13 சத­வீ­தத்­தில் இருந்து, 50 சத­வீ­த­மாக உய­ரும்.

அடுத்த ஆண்டு ஜன., முதல், புதிய மின் தரக் குறி­யீடு அம­லுக்கு வரு­வ­தால், இவ்­வகை, ‘ஏசி’களின் விற்­பனை மேலும் அதி­க­ரிக்­கும். ‘ஏசி’ நிறு­வ­னங்­களும், பாரம்­ப­ரிய, ‘ஏசி’ தயா­ரிப்­பில் இருந்து, ‘இன்­வெர்ட்­டர் ஏசி’ சாத­னங்­களை தயா­ரிப்­ப­தில், அதிக கவ­னம் செலுத்த துவங்­கும். புதிய, ஜி.எஸ்.டி., நடை­முறை, ‘ஏசி’ நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் ஆதா­யத்தை அளித்­துள்­ளது; பல­த­ரப்­பட்ட வரி­களின் சுமையை குறைத்­துள்­ளது. அத்­து­டன், மாநி­லங்­கள் இடை­யி­லான, சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு, நேரம் ஆகி­ய­வை­யும் குறைந்­துள்ளன. இது, ‘ஏசி’ விலையை உயர்த்­தா­மல், சந்­தை­யில் போட்­டியை சமா­ளிக்­கும் ஆற்­றலை, தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு அளித்து, ‘ஏசி’ துறை வளர்ச்சி காண உத­வும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை