மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறேன் : நமீதா

தினமலர்  தினமலர்
மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறேன் : நமீதா

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். நேற்று நடந்த வார இறுதி நிகழ்ச்சியில் பிக்பாஸ் கமலஹாசன் கலந்து கொண்டு கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்தார். ஓவியாவை அடிக்க கை ஓங்கிய ஷக்தியை கண்டித்தார். அதேப்போல எதற்கெடுத்தாலும் அழுகாச்சி வேஷம் போடும் ஜூலிக்கு அறிவுரை செய்ததோடு, அவர் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

ஜூலிக்கு உடல் நலம் சரியில்லாதபோது ஆண்கள் உதவியதையும், பெண்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததையும் கண்டித்தார். அதேப்போல பரணி வெளியேற்றப்பட்டபோது அதற்காக யாரும் கலங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நாடகத்தை பாராட்டியவர். அதில் சிறப்பாக நடித்தது வையாபுரி என்றும் நடிக்கவே தெரியாதவர் ஜூலி என்றும் விமர்சித்தார்.

நேற்றைய எலிமினேஷன் இறுதி சுற்றில் கணேஷ் வெங்கட்ராமும், நமீதாவும் இருந்தனர். அதில் கணேஷ் வெங்கட்ராமை நேயர்கள் அதிக வாக்களித்து காப்பாற்றியதால் நமீதா வெளியேற்றபட்டார். இதுகுறித்து நமீதா கூறியதாவது:

நான் மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறேன். என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் இது. சினேகன் எனக்கு ஒரு அண்ணனாக இருந்தார். அவர் அன்பை மறக்க முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவரை என் அண்ணனாக தொடர்வேன். சிலர் என்னை புறம்பேசினார்கள். என் முதுகில் குத்தினார்கள். அதுவும் எனக்குத் தெரியும். அவைகளை மறக்க முயற்சிக்கிறேன். எனது செல்ல நாய்குட்டி சாக்லெட்டை இத்தனை நாள் பிரிந்து இருந்ததில்லை. இரண்டு நாட்கள் அவனுடன் செலவிடப்போகிறேன் என்றார்.

மூலக்கதை