டெட்ராய்ட் நகரில் கோதாவரி...!

தினமலர்  தினமலர்
டெட்ராய்ட் நகரில் கோதாவரி...!

டெட்ராய்ட் : அமெரிக்காவின் பல நகரங்களில் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளை விருந்து படைத்து வருகிறது கோதாவரி ரெஸ்டாரான்ட். பாஸ்டன் நகரில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ரெஸ்டாரான்ட், தற்போது இது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டெட்ராய்ட் நகரில் புதிய கிளையை ஜூலை 22-ம் தேதி துவக்குகிறது.

டெட்ராய்ட் மற்றும் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில், மிக விசாலமான பார்க்கிங் வசதியுடன், மாலில் சுமார் 150 பேர் அமரும் வசதியுடன் கூடிய புஷ்காரா என்ற கவர்ச்சிகரமான பேங்கெட் ஹாலுடன் இந்த ரெஸ்டாரான்ட் அமைய உள்ளது.

திறப்பு விழா அன்று தென்னிந்தியாவின் பிரபல உணவுகளான அமலா அப்பளம் பஜ்ஜி, கோல்கோண்டா கோடி சிப்ஸ், பம்ப்செட் பீத்தலா வெப்புடு, அமராவதி பூரநாலு, முனியாண்டி விலாஸ் நாட்டுக் கோழி போன்ற பாரம்பர்ய கிராமிய உணவு வகைகளைச் சிறப்பு உணவுகளாக வழங்க இருக்கின்றனர். 

மூலக்கதை