கடற்கரையில் 1500 கிலோ போதைப்பொருள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடற்கரையில் 1500 கிலோ போதைப்பொருள்!!

Landes இலுள்ள Mimizan கடற்கரையில் பெரும் போதைப்பொருள் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, ஜோந்தார்மினரால் 1.5 தொன்னிற்கும் அதிகமான கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
 
அதிகமாக வெளிநாட்டவர்கள் வரும் இந்தக் கடற்கரைப் பகுதியில், கடலில் இருந்து வந்த பேதைப்பொருட் பொதிகளைச் சேகரித்துக் கொண்டிருந்த, போதைப்பொருட் கும்பல்கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கிறீசைச் சேர்ந்தவர்கள்.
 
சுற்றுலாப் பயணிகள் கூடும் கடற்கரைப் பகுதி மூலம், 1500 கிலோவிற்கும் அதிகமான கொக்கெய்னைப் பிரான்சிற்குள் கொண்டு வர இந்தக் கடத்தற்காரர்கள் முயன்றுள்ளனர். இது பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியானவை. ஜோந்தார்மினரின் அதிரடி நடவடிக்கையினால் இந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை