ரிடுவீட், டிரென்டிங், ஹேஷ்டேக் 'மெர்சல்' சாதனை

தினமலர்  தினமலர்
ரிடுவீட், டிரென்டிங், ஹேஷ்டேக் மெர்சல் சாதனை

சமூக வலைத்தளங்களில் திரைப்படங்கள் மூலம் நிகழும் சாதனை எதற்குப் பயன்படுகிறதோ இல்லையோ போட்டி போடும் நடிகர்களின் ரசிகர்களுக்கு சண்டை போட்டுக் கொள்ள ஒரு காரணமாக அமைகிறது. அதிலும் குறிப்பாக இளம் ரசிகர்களுக்குள் அதிகமான போட்டி வரக் காரணமான நடிகர்கள் அஜித், விஜய் மட்டுமே. ஒருவர் படத்தை மற்றவர் படம் முந்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'மெர்சல்' படத்தின் தலைப்பு அறிவிப்புடன் கூடிய முதல் பார்வை நேற்று மாலை டுவிட்டரில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள் அதை ரிடுவீட் செய்தவர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

விஜய்யின் டிவிட்டர் கணக்கில் 'மெர்சல்' முதல் பார்வை 38 ஆயிரம் முறை ரிடுவீட் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயின் டுவிட்டர் கணக்கில் 22 ஆயிரம் முறை ரிடுவீட்டும், தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்டர் கணக்கில் 19 ஆயிரம் முறை ரிடுவீட்டும் செய்யப்பட்டுள்ளது. அதோடு மற்ற பிரபலங்களின் டுவிட்டர் கணக்கில் ரிடுவீட் செய்யப்பட்டதையெல்லாம் கணக்கில் எடுத்தால் அது சில லட்சங்களைத் தாண்டுகிறது.

ஆனால், 'விவேகம்' படத்தின் முதல் பார்வை அதன் இயக்குனர் சிவா டுவிட்டர் கணக்கில் 24 மணி நேரத்திலேயே 31 ஆயிரம் முறை மட்டுமே ரிடுவீட் செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 'மெர்சல்' 2வது பார்வை விஜய்யின் டுவிட்டர் கணக்கில் இதுவரை 21 ஆயிரம் ரிடுவீட்டுகளும், அட்லீ கணக்கில் 13 ஆயிரம் ரிடுவீட்டுகளும் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமுல்ல 'Mersal' என்ற ஹேஷ்டேக் மட்டும் நேற்று மாலை முதல் இதுவரை 9 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை, படத் தலைப்பு, விஜய்யின் பிறந்த நாள் வாழ்த்து என மொத்தமாக உருவாக்கப்பட்ட 60 ஹேஷ்டேக்குகளும் நேற்று டிரென்டிங்கில் இருந்தன. 'மெர்சல்' ஹேஷ்டேக் நேற்று உலக அளவில் டிரென்டிங்கில் இருந்தது.

யு டியுப் சாதனைகளுக்காக மட்டுமே எழுந்த போட்டி நேற்று முதல் புதிதாக டுவிட்டரில் ரிடுவீட், ஹேஷ்டேக், டிரென்டிங் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்து 'விவேகம்' படத்தின் இசையும், டிரைலரும் வரும் வரை அஜித் ரசிகர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

மூலக்கதை