பிரான்சின் புதிய இராணுவ அமைச்சர்! - நேற்று பதவியேற்றார்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சின் புதிய இராணுவ அமைச்சர்!  நேற்று பதவியேற்றார்!!

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை, இராணுவ அமைச்சர் Sylvie Goulard பதவி விலகியிருந்தார். அதைத்தொடர்ந்து புதிய இராணுவ அமைச்சராக 54 வயதுடைய Florence Parly என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
பிரதமர் Edouard Philippe இன் அமைச்சரவையின் முற்று முழுதான பட்டியல் நேற்று புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் MoDem கட்சியைச் சேர்ந்த மூவர் பதவி விலகியிருந்ததால், அவர்களின் இடத்தை மூன்று புதிய அமைச்சர்களால் நிரப்பப்பட்டனர். அமைச்சர்கள் பட்டியலை அறிவித்த Edouard Philippe, புதிய இராணுவ அமைச்சராக Florence Parlyஐ நியமித்திருப்தார். இவரை முன்னதாக 2000 ஆம் ஆண்டில், வரவுசெலவுத் திட்ட  மாநில செயலாளராக, பிரதமர் Lionel Jospin நியமித்திருந்தார். 15 வருடங்களின் பின்னர் தற்போது Edouard Philippe அரசில் இணைந்துள்ளார். 
 
Florence Parly முதன் முறையாக 1995 ஆம் ஆண்டு, சோசலிச கட்சியில் இணைந்தார். தேசிய நிர்வாக கல்லூரியில் விஞ்ஞான அறிவியல் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை