பயங்கரவாதமும் பிரான்சும்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதமும் பிரான்சும்!!

1986 - பயங்கரவாதம் (terrorismeந) என்ற வார்த்தை முதன் முதலாகப் பிரான்சின் சட்டவரைபில் சேர்க்கப்பட்டது. பயங்கரவாதத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை நான்கு நாட்களிற்கு அதாவது 96 மனித்தியாலங்கள் வைத்து விசாரிக்கும் அனுமதியும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் 48 மணித்தியாலத்திற்கு முன்னர் நீதிமன்னறத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதே வருடமே பயங்கரவாதத் தடைப்பிரிவின் நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது.
 
 
1996 - சன்-மிசேல் தொடருந்து நிலையத் தாக்குதல் உட்டபடப் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் 1995 இல் நடைபெற்றதை; தொடர்ந்து, «குற்றம் செய்பவர் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணுபவர்» (d’association de malfaiteurs en relation avec une entreprise terroriste) என்ற வாசகம் குற்றப் பதிவில் இணைக்கப்பட்டது.
 
2001 - 11 செப்டெம்பரின் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர், துறைமுகங்கள், விமான நிலையஙகள், வாகனங்கள் என்பனவற்றில், பொதிகளைச் சோதனையிடவும், ஆட்களைச் சோதனையிடவும் அனுமதி வழங்கப்பட்டது.
 
2006 - பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை காவற்துறையினர்  வைத்து விசாரிக்கும் உரிமைக் கால எல்லையானது நான்கு நாட்களில் இருந்து ஆறு நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அத்துடன் தொலைபேசி உரையாடல்களை ஒரு வருடத்திற்குப் பேண வேண்டிய கட்டாயத்தினை, தொலைத்தொடர்பு நிறுவனங்களிற்கு அரசாங்கம் வலியுறுத்தியது.
 
2014 - பயங்கரவாதச் செயற்பாடு, தீவிர இஸ்லாமியத் தொடர்பு போன்றவற்றினால் சிரியாவிற்குச் சென்று பயங்கரவாதிகளுடன் இணைவதைத் தடுப்பதற்காக, «நாட்டை விட்டு வெளியேறத் தடைவிதிக்கும் தடைச்சட்டம்»(interdiction de sortie du territoire) உருவாக்கப்பட்டது. கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டன.
 
 
2015 - பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
 

மூலக்கதை