உள்கட்டமைப்பு துறைக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு: ‘அசோசெம்’ கோரிக்கை

தினமலர்  தினமலர்
உள்கட்டமைப்பு துறைக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு: ‘அசோசெம்’ கோரிக்கை

புது­டில்லி : ‘உள்­கட்­ட­மைப்பு துறை­யில், சாலை, ரயில்வே போன்ற போக்­கு­வ­ரத்து சார்ந்த திட்­டங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை கூட்­ட­மைப்­பான – ‘அசோ­செம்’ வலி­யு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக, அசோ­செம், மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­திற்கு எழு­தி­யுள்ள கடி­தம்: சாலை மற்­றும் ரயில் துறை­களில், போக்­கு­வ­ரத்­துக்­கான உள்­கட்­ட­மைப்பு திட்­டங்­கள் முடிய நீண்ட காலம் ஆகும். மேலும், இத்­திட்­டங்­களில் வரு­வா­யும் குறை­வா­கவே உள்­ளது. அத­னால், சாலை மற்­றும் ரயில்வே துறை­களில், போக்­கு­வ­ரத்து சார்ந்த பணி­க­ளுக்­கான வரிச்­ச­லுகை, ஜி.எஸ்.டி.,யிலும் தொடர வேண்­டும். இப்­ப­ணி­களை மேற்­கொள்­ளும் ஒப்­பந்­த­தா­ரர்­கள், நேர­டி­யாக கொள்­மு­தல் செய்­யும் பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில், உள்­ளீட்டு வரி விதி­மு­றை­யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும். இத­னால், அவர்­களின் நடை­முறை மூல­த­னம் முடங்­கு­வது தடுக்­கப்­படும்.

தற்­போது, நெடுஞ்­சா­லை­களில், பய­ணி­ய­ரி­டம் வசூ­லிக்­கும் சுங்­கக் கட்­ட­ணத்­திற்கு, சேவை வரி கிடை­யாது. அது போல, சாலை பணி­கள் மற்­றும் நெடுஞ்­சாலை பரா­ம­ரிப்­பிற்­காக, ஒப்­பந்­த­தா­ரர்­க­ளு­டன், தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம் பகிர்ந்து கொள்­ளும் குறிப்­பிட்ட வரு­வாய்க்­கும் சேவை வரி இல்லை. ஜி.எஸ்.டி.,யில், சாலை அல்­லது பாலத்­தில் பய­ணிப்­போ­ரி­டம் வசூ­லிக்­கும் சுங்­கக் கட்­ட­ணத்­திற்கு, சேவை வரி­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

ஆனால், அதே சுங்­கக் கட்­ட­ணத்­தில், தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம், ஒப்­பந்­த­தா­ர­ரு­டன் பகிர்ந்து கொள்­ளும் தொகைக்கு வரி விலக்கு குறித்து, ஜி.எஸ்.டி.,யில் குறிப்­பி­ட­வில்லை. இந்த குழப்­பத்தை தெளி­வுப்­ப­டுத்தி, வரி விலக்கு அளிக்­கப்­படும் என, அறி­விக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை