பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது இந்தியா!

PARIS TAMIL  PARIS TAMIL
பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது இந்தியா!

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் அரையிறுதியில் போராட்டமின்றி பங்களாதேஷ் அணியினை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 
சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி பங்களாதேஷ் அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
 
அதன்படி முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றது.பங்களாதேஷ் தமிம் இக்பாலை ஏழு நான்கு மற்றும் ஓர் ஆறு ஓட்டம் அடங்கலாக எழுபது ஓட்டங்களையும்,ரகிம் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். கடைசியாக அதிரடியாக ஆடிய மோட்ராசா ஐந்து நான்கு ஓட்டங்களுடன் முப்பதினைப் பெற்றார்.பந்து வீச்சில் பூம்ரா, புவனேஸ்வர் குமார், கேதார் யாதவ் தலா இரு விக்கெட்டுக்களையும் ஜடேயா ஒரு விக்கெட்டையும் கைப்பெற்றினார்கள். 
 
265 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது விக்கெட்டுக்களை வீழ்த்த பங்களாதேஷ் வீரர்கள் கடுமையாகப் போராடினர்.  இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.தவான் 46  ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
 
அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 96 ஓட்டங்களை எடுத்தார். இவர்களது ஆட்டத்தால் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 40.1 ஓவரில் 265 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
129 பந்தில் 15 நான்கு, 1 சிக்சருடன் 123 ஓட்டங்களை பெற்ற ரோகித் சர்மா ஆட்ட நாயகன் தெரிவுசெய்யப்பட்டார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மூலக்கதை